பாயாசம் குக்கர் முறை
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி, பாயாச சேமியா - 1 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
தேங்காய் பால் மற்றும் பால் - 1 கப்
முந்திரி, திராட்சை - 1/4 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் - 3
வெனிலா எசன்ஸ் - 2 துளி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சை, ஏலக்காயை வறுத்து எடுத்து கொள்ளவும்.
குக்கரில் 4 தேக்கரண்டி நெய் ஊற்றி ஜவ்வரிசி மற்றும் சேமியாவை நன்றாக வறுக்கவும்.
பின் பால் மற்றும் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து, 2 துளி வெனிலா எசன்ஸ், மீதமுள்ள நெய் சேர்த்து 5 விசில் வந்ததும், 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்.