பாதாம் ஹல்வா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 2 கப் (குவித்து)

சீனி - 2 கப்

நெய் - 1 கப்

பால் - 1 கப்

குங்குமப் பூ - ஒரு சிட்டிகை

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

லெமன் கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

பாதாமை கொதிக்கும் நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு பால் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் சீனி சேர்த்து நல்ல வெளுப்பான கனமான வாணலியில் கிளறவும்.

சிறு தீயில் வைத்து கிளறவும்.

சீனி கரைந்து நன்கு கொதித்து வற்ற ஆரம்பித்ததும், நெய்யில் பாதியை சேர்த்து மேலும் நன்கு கிளறவும்.

இந்த கலவை சற்று தளதளவென்று இருக்கும் போது குங்குமப் பூ, ஏலக்காய்பொடி, கலர் சேர்த்து கிளறி இறக்கவும்.

இறக்கி வைத்த பின் மீதி நெய்யை விட்டு, நன்கு கிளறவும்.

இது கிளற கிளற நன்கு திரண்டு வரும். அடுப்பை அணைத்து இந்த கலவையை ஒரு மூடி போட்ட டப்பாவில் எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்: