பாதாம் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1/4 கப்

பாதாம் பவுடர் - 1/2 மேசைக்கரண்டி

பால் - 1 கப்

சீனி - 1/2 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாதாம் பருப்புகளை போட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

தோல் உரித்து வைத்திருக்கும் பாதாம் பருப்பை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். அதில் சீனியை போட்டு நன்கு கிளறி விட்டு கரைய விடவும்.

சீனி கரைந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் பாதாம் விழுதை போட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

பாதாம் கலவை சற்று கெட்டியானதும் அதில் பாதாம் பவுடரை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.

பாதாம் கலவை கொதித்து கெட்டியான பதம் வரும் வரை வைத்திருக்கவும். அதன் பின்னர் 5 நிமிடம் கழித்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த பாதாம் ஹல்வாவை ஊற்றவும். பட்டர் பேப்பர் இருந்தால் அதில் இந்த பாதாம் ஹல்வாவை ஒரு கரண்டி எடுத்து வைத்து மடித்து வைத்தும் பரிமாறலாம்.