பாதாம் மிக்சர் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 30

பாசிப்பருப்பு - 2 கோப்பை

பால் - 3 கோப்பை

சர்க்கரை - 1 கோப்பை

நெய் - 1 கோப்பை

ஏலக்காய் - 10

பச்சை கற்பூரம் - கொஞ்சம்

குங்குமப்பூ - கொஞ்சம்

கேசரிப்பவுடர் - கொஞ்சம்

பாதாம் எசன்ஸ் - 10 சொட்டு

செய்முறை:

பாசிப்பருப்பை ஊற வைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் பாதாம் பருப்பையும் சேர்த்துக் கொண்டு ஆட்டு உரலில் போட்டு கொஞ்சமாகப் பால் தெளித்து நன்றாக ஆட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, நெய் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

அடுப்பை மிதமாக எரிய விட்டு கேசரிப் பவுடரையும் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு வந்து விடும்.

அதன்பின் அதை நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி கத்தியால் கீறி துண்டுகளாக செய்து கொள்ளலாம்.

குறிப்புகள்: