பாதாம் கேக்
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:
பாதாமை தண்ணிரில் ஊற வைத்து தோலை உரித்து, ஈரம் போக காய வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸ் பவுடராக அரைக்கவும். (மிக்ஸியை நிறுத்தி, நிறுத்தி அரைக்க வேண்டும், அப்பொழுது தான் நைஸாக அரைக்க வரும்.)
சர்க்கரையை 1 தம்ளர் தண்ணீர் விட்டு, கம்பி பாகு காய்ச்சவும்.
பாதாம் பொடியை சேர்த்துக் கிளறவும். (சப்பாத்தி மாவு போல் ஒட்டாமல் உருண்டு வரும்.)
நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, ஆறியவுடன், விருப்பமான வடிவில் துண்டுகளாக்கவும்.