பாதாம் அல்வா (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதாம் - 1 கப்

பால் - 2 கப்

நெய் - 1 1/4 கப்

சர்க்கரை - 1 1/4 கப்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:

கொதிக்கும் வெந்நீரில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தோல் நீக்கிய பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் சீனியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது.

பாதாம் கலவை நன்கு கெட்டியாகி அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்கவும்.

அல்வாவை இறக்கி வைத்து மேலே குங்குமப்பூவை தூவவும். பின்னர் 10 - 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருந்தால் நெய் பிரிந்து மேலே வந்துவிடும். நெய் மணத்துடன் கூடிய சுவையான பாதாம் அல்வா ரெடி.

குறிப்புகள்:

இதற்கு வேறு எந்த பருப்பு வகைகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டிய அவசியமில்லை.