பாசிப்பருப்பு பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 200 கிராம்

உலர் திராட்சை - 10

பால் - 1/4 லிட்டர்

கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 2

முந்திரி - 10

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பை சிவக்க வறுத்து வேக விடவும்.

வெந்ததும் மத்தால் நன்கு மசிக்கவும்.

வெல்லத்தை தூள் செய்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.

பால் சேர்த்து கொதிக்க விடவும்.

நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயச்த்தில் கொட்டவும்.

ஏலக்காயை தூளாக்கி சேர்த்து, தேங்காய் பாலையும் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: