பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 200 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம் (ஊற வைக்கவும்)
அச்சு வெல்லம் - 500 கிராம்
தேங்காய் - அரை மூடி (கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்)
ஏலக்காய் - 8.
நெய் - 3 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 1/4 கப்
திராட்சை - 1/4 கப்.
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
குக்கரில் ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு 2 விசில் வேக வைக்கவும்.
பின்பு பாசிப்பருப்பையும் தண்ணீர் விட்டு 4 விசில் வேக வைக்கவும்
அச்சு வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொள்ளவும்.
பின்பு அடிகனமான பாத்திரத்தில் வேகவைத்த பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, காய்ச்சிய வெல்லம், தேங்காய், ஏலக்காய் தட்டி போட்டு, ஒரு பின்ச் உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து பாயசக்கலவையில் போட்டு பரிமாறவும் .