பழக் கேசரி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கின ஆப்பிள் - 1/2 கப்

நறுக்கின அன்னாசி - 1/2 கப்

திராட்சை - 100 கிராம்

சர்க்கரை - 2 கப்

கடலெண்ணெய் - 100 மில்லி

நெய் - 25 கிராம்

முந்திரி - 1/4 கப்

ரவை - 1 கப்

ஏலக்காய் - 2

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஆப்பிள், அன்னாசி, திராட்சை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் மூன்று தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஊற வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய், நெய் இவற்றை காயவைத்து அதில் முந்திரி ரவை சேர்த்து வறுத்து இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

ரவை வெந்து கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து சர்க்கரை 2 கப், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறவும்.

பிறகு அதில் ஊற வைத்த பழங்களை சேர்க்கவும். பின் ஏலக்காயினை பொடி செய்துப் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: