பழக் கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பழக்கலவை - 1/4 கிலோ

ரவை - 1/4 கிலோ

சீனி - 100 கிராம்

ஏலக்காய் - 5

முந்திரிப் பருப்பு - 10 கிராம்

நெய் - 50 கிராம்

கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வர வறுத்து வைக்கவும்.

ஏலக்காயை தோல் நீக்கி அரை டீ ஸ்பூன் சீனி சேர்த்து பொடித்து வைக்கவும்.

ஒரு கடாயில் மீதமுள்ள நெய்யை விட்டு முந்திரிப் பருப்பு போட்டு சிவக்க வறுத்து பழக்கலவையை போட்டு அறநூறு மி.லி தண்ணிர் விட்டு வேக வைக்கவும்.

பழங்கள் வெந்ததும் உப்பு, ரவையைப் போட்டுக் கிண்டவும்.

கேசரிப் பவுடர், ஏலப்பொடி போடவும்.

ரவை வெந்து தண்ணீர் வற்றியதும் சீனியை கொட்டி கிண்டவும். ஒட்டாமல் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: