பலாப்பழ பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலாப்பழ சுளைகள் - 10

பாசிப்பருப்பு (பொங்கல் பருப்பு) - 1 கப்

வெல்லம் - 250 கிராம்

நெய் - 5 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - ஒரு முழு தேங்காயிலிருந்து எடுத்த முதல் மற்றும் இரண்டாம் பால்

ஏலக்காய் - 3

முந்திரி பருப்பு - 10

கிஸ்மிஸ் - 10

செய்முறை:

பாசிப்பருப்பை சிறிது நெய்யில் வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும்.

வறுத்த பருப்பை குக்கரில் குழைய வேக வைக்கவும்.

பலாப்பழ சுளைகளை பொடியாக நறுக்கவும். வெல்லத்தை பொடியாக்கி சிறிது நீரில் கரைத்து வடிகட்டவும்.

அடிகனமான பாத்திரத்தில் இரண்டாம் தேங்காய் பால் அரை கப் ஊற்றி அதில் பழத்தினை வேகவிடவும்.

பழம் வெந்ததும் வெல்லக்கரைசல் ஊற்றி கிளறவும். 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

நீர் வற்றும் போது அடிப்பிடிக்காமல் கிளறவும்.

நீர் முழுவதும் வற்றி பழக்கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது மீதமுள்ள இரண்டும் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

வேகவைத்த பருப்பு 2 ஸ்பூன் நெய், ஏலக்காய் சேர்க்கவும். இடையிடையே கிளறி கொடுக்கவும்.

எல்லாம் நன்றாக கலந்து குறுகி வரும் போது முதல் பாலை ஊற்றி 2 அல்லது 3 நிமிடங்களில் இறக்கி விடவும்.

முதல் பால் ஊற்றிய பிறகு அதிக நேரம் கொதிக்க வேண்டாம். மீதமுள்ள நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.

குறிப்புகள்: