பயத்தம்பருப்புப் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
பெரிய தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 5
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுத்து தனித்தனியாக வைக்கவும்.
வெல்லத்தைப் பொடியாக நுணுக்கிக் கொள்ளவும்.
பெரிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கொண்டு சீவி வைத்த வெல்லம், வேக வைத்த பருப்பு சேர்த்து தீயை மிதமாக வைத்து அதில் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றவும்.
வெல்லம் கரைந்தவுடன் ஏலப் பொடி, மற்றும் முதலில் எடுத்த பால் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.