பப்பாளி பர்பி
தேவையான பொருட்கள்:
பப்பாளிப்பழம் - 3
பால்கோவா - 100 கிராம்
ஏலக்காய் - 10
முந்திரி - 20
சீனி - 2 கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பப்பாளிப் பழங்களைத் தோல் நீக்கி அரிந்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு துண்டுகளைப் போட்டு வதக்கி எடுத்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்த பப்பாளி விழுதுடன் பால்கோவாவை கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் நெய் விட்டு இந்த கலவையைப் போட்டு சீரான தீயில் வதக்கவும்.
நன்கு வெந்து வாசனை வரும்போது முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும். அதனுடன் ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கிளறி இறக்கிக் கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியை எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சவும்.
அதில் இந்த கலவையைப் போட்டு நன்கு கிளறவும். கலவை பக்குவமானதும் இறக்கவும்.
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.