பப்பாளி அல்வா
தேவையான பொருட்கள்:
பழுத்த பெரிய பப்பாளி (இனிப்பானது) - 1
சர்க்கரை - 1/2 கப் (தேவைக்கு)
நெய் - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
முந்திரி - தேவைக்கு
செய்முறை:
பப்பாளியை மிக்சியில் விழுதாக அரைக்கவும். ஏலக்காய் பொடி செய்து வைக்கவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். அதிலேயே அரிசி மாவையும் லேசாக வறுத்து சிறிது நீர் கலந்து வைக்கவும்.
பப்பாளி விழுதை அடுப்பில் வைத்து கிளறவும். சற்று பச்சை வாசம் குறையும் போது சர்க்கரை, கரைத்த மாவு கலவை சேர்த்து கலக்கவும்.
மீண்டும் நீர்த்து கெட்டியாக துவங்கும். அப்போது ஏலக்காய், நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து எடுக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்.
குறிப்புகள்:
அரிசி மாவு சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் கெட்டி பதம் வராது.
சர்க்கரை பழத்தின் இனிப்பு தன்மைக்கு ஏற்ப சேர்க்கவும். இதில் அரை கப் கூட சேர்க்கவில்லை, அத்தனை இனிப்பானது மாலத்தீவு பப்பாளி பழம். விரும்பினால் பாலும் சேர்க்கலாம்.
காய வைத்து ஆற வைத்த அரை கப் பால் சர்க்கரை சேர்த்து சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது ஊற்றி மீண்டும் 10 நிமிடம் வைத்து கிளற வேண்டும்.