பனானா ஓட்ஸ் பர்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பழக்கூழ் - 1 கப்

வறுத்து பொடித்த ஓட்ஸ் - 1 கப்

பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

சர்க்கரை தூள் - 1 1/2 கப்

பாதாம் சீவல் - 1/4 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனில் 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு மைக்ரோ மீடியமில் 15 செகண்ட்ஸ் வைக்கவும்

நெய் உருகியதும் எடுத்து வாழைப்பழக்கூழையும் ஓட்ஸையும் கொட்டி கிளறி அதை ஓவனில் 5 நிமிடங்கள் வைக்கவும்.

நடுவில் ஒருமுறை எடுத்து கிளறவும்

பிறகு அதில் பால்பவுடர்,சர்க்கரைத்தூள்,ஏலக்காய்,பாதாம் சீவல் ,மீதமுள்ள நெய் விட்டு கிளறி மேலும் 5 நிமிடங்கள் மைக்ரோமீடியமில் வைக்கவும்

நடுவில் ஓரிருமுறை எடுத்து நன்றாக கிளறவும்

கடைசியில் எடுத்து கிளறும்போது ஒட்டாமல் சுருண்டு வந்தால் அதை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: