நேந்திரம் பழப் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய நேந்திரம் பழங்கள் - 4

வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் - ஒரு மூடி

கீறிய தேங்காய் - 1/4 மூடி

ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

திராட்சை - 20 கிராம்

செய்முறை:

சிறு துண்டுகளாய் கீறிய தேங்காய், திராட்சை இரண்டையும் சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

தேங்காயை மூடியை துருவி அரைத்து மூன்று முறை தண்ணீர் ஊற்றி, பாலைப் பிழிந்து தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்துடன் இரண்டு கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

பாகு கெட்டியாகும் முன்பே இறக்கி விடவும்.

நேந்திரம் பழங்களை ஆவியில் வேகவைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.

நசித்த நேந்திரம் பழத்தை நன்றாக கலக்கவும்.

நன்றாக கலந்ததும் முதலில் தேங்காயில் இருந்து எடுத்த மூன்றாவது பாலை விடவும்.

ஐந்து நிமிடம் கொதித்த பின்பு, இரண்டாவது பாலை விடவும்.

பிறகு 5 நிமிடம் சென்றபின் முதற்பாலை விட்டு நன்றாக கலக்கி இறக்கவும்.

ஏலப்பொடி தூவி, வறுத்த தேங்காய், திராட்சையை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: