நுகுல் உருண்டை
0
தேவையான பொருட்கள்:
எள் - 1 கப்
கொப்பரை தேங்காய் - 1
வெல்லம் - 1 கப்
நிலக்கடலை - 1 கப்
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
எள்ளை நீரில் கழுவி சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். பின்னர் பொடி செய்யவும். நிலக்கடலையை வறுத்து தோலுரித்து பின்னர் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை தட்டி கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது நீர் தெளித்து உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.