நட்ஸ் லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோல் எடுத்த பாதாம் - 1/2 கப்

தோல் எடுத்த பிஸ்தா - 1/4 கப்

முந்திரி பருப்பு - 1/4 கப்

வால் நட் - 1/4 கப்புக்கு கொஞ்சம் குறைவாக

பொட்டு கடலை - 1/4 கப்

பொடித்த சீனி - 1/2 கப்

ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி

சின்னதாக துண்டுகளாக்கிய பேரிச்சை பழம் - 3

நெய் - 5 தேக்கரண்டி

செய்முறை:

எல்லாவற்றையும் நல்ல ரோஸ்ட் செய்து (எல்லாவற்றையும் மைக்ரோவேவில் கூட வைத்து ரோஸ்ட் செய்யலாம். 15 நிமிடம் அவரவர் ஒவனின் பவரை பொறுத்து) ஆறின பிறகு பொடிக்கவும்.

அதில் ஏலப்பொடி, பொடித்த சீனியையும் சேர்த்து பொறுக்கும் சூட்டில் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: