நட்ஸ் புட்டிங்
தேவையான பொருட்கள்:
அகர் அகர் - 2 அல்லது 3 தேக்கரண்டி
பால் - 2 கப்
கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்
தண்ணிர் - 1 கப்
சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
நட்ஸ் - சிறிது
முந்திரி - 3
பாதாம் - 1 மேசைக்கரண்டி
பிஸ்தா - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
முதலில் சர்க்கரை, முந்திரி, பாதாமை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் ,சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். ஏலக்காயை தட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அகர் அகரை தண்ணீரில் போட்டு லேசான தீயில் கொதிக்க விடவும்.
சிறிது நேரத்தில் அகர் அகர் எல்லாம் கரைந்ததும், பால், கன்டென்ஸ்டு மில்க் போட்டு நன்கு கலந்துவிட்டு கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்து வரும்போது, அடுப்பை லேசான தீக்கு மாற்றி, பொடித்து வைத்த நட்ஸ் கலவையை இதில் போடவும். தட்டி வைத்த ஏலக்காய் பொடியையும் சேர்த்து, அடுப்பை அணைத்து விடவும்.
விருப்பமான கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் செட் ஆகும்வரை வைக்கவும்.
பரிமாறும்போது, கப்பின் மேலே ஒரு செர்விங் ப்ளேட்டை வைத்து தலைகீழாக கவிழ்த்து எடுத்து, மேலே, பிஸ்தாவை ஒன்றும் பாதியுமாக பொடித்து தூவி பரிமாறவும்.