தேங்காய் லட்டு (2)
0
தேவையான பொருட்கள்:
கோவா - 400 கிராம்
துருவிய தேங்காய் - 4 கப்
பாதாம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 10
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பாதாம் பருப்பு மற்றும் திராட்சைகளை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு அடிப்பிடிக்காத தவாவில் கோவாவினையும், துருவிய தேங்காயையும் சேர்த்து, கலந்து வேகவைக்கவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்வரை விடாமல் கிளறவும். பிறகு அதில் ஏலப்பொடி, பாதாம் மற்றும் திராட்சை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி இளம்சூட்டிலேயே சிறு சிறு லட்டுகளாக உருட்டிக் கொண்டு, துருவிய தேங்காயில் புரட்டி எடுத்துக் பரிமாறவும்.