தேங்காய் லட்டு (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உலர்ந்த தேங்காய் துருவல் - 3 கப்

பால் - 1 கப்

சர்க்கரை (சீனி) - 2 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்.

பால் கொதித்ததும் 2 கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளரவும்.

சிறிது நேரத்தில் பால் முழுதும் தேங்காய் உறிந்து விடும், இப்போது சர்க்கரை சேர்த்து கிளரவும்.

மிதமான தீயில் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளரவும்.

லேசான சூட்டில் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடிக்கவும்.

இதை மீதம் இருக்கும் ஒரு கப் தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: