தேங்காய் லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்

டெஸிகேட்டட் கோக்கனட் (உலர்ந்த தேங்காய் துருவல்) - 1 1/2 கப் + 1/2 கப்

ஏலக்காய் தூள் - சிறிது

நட்ஸ் - விருப்பத்துக்கு

செய்முறை:

கன்டென்ஸ்டு மில்கை ஒரு நாண்-ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

இதில் 1 1/2 கப் அளவுள்ள தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.

கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, மீதம் உள்ள அரை கப் துருவலை எடுத்து வைக்கவும்.

கலவை சற்று சூடு குறைந்ததும் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் கலவை தயாரானதும் சூடான பாத்திரத்தை விட்டு எடுத்து விடவும், இல்லையெனில் பாத்திரத்தில் படும் கலவை சிவந்து போகும்.

தேங்காய் லட்டு பல வகை உண்டு. கன்டென்ஸ்டு மில்குக்கு பதில் பால் சேர்த்தும் செய்யலாம். அப்படி செய்தால் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

இதில் இன்னும் சுவையும், ஆரோக்கியமும் சேர்க்க விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கும் போது முந்திரி, பாதாம் போன்றவை பொடித்து சேர்த்து கிளறலாம்.

கலர் சேர்க்க விரும்பினாலும் சேர்க்கலாம்.

மேலே பிரட்ட டெஸிகேட்டட் கோக்கனட் (உலர்ந்த தேங்காய் துருவல்) சேர்ப்பதால் சில நேரம் மேல் பகுதி ட்ரையாக இருப்பது போல் இருக்கலாம். அதை விரும்பாவிட்டால் ஃப்ரெஷ் தேங்காய் துருவல் சேர்க்கலாம். ஆனால் அதை ஒரே நாளில் செலவு செய்துவிட வேண்டும்.

பிரட்ட பயன்படுத்தும் துருவலோடு நட்ஸ் வகைகள் பொடித்து சேர்த்தால் பார்க்கவும் அழகாக இருக்கும், சுவையாகவும் இருக்கும்.