தேங்காய் பூ ஸ்வீட்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1

சீனி - 1/2 கிலோ

விரும்பிய கலர் பவுடர் - 1/2 தேக்கரண்டி

வெனிலா - 1 தேக்கரண்டி

பட்டர் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

தேங்காயை துருவி வைக்கவும்.

சீனியை அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

சீனி நன்றாக கரைந்து கொதி வந்ததும் கலரிங்கை விடவும்.

பின்பு தேங்காய் பூவையும் போட்டு கிளறவும்.

பின்பு பட்டரை போட்டு கிளறி, தாச்சியை விட்டு திரண்டு வரும் போது வெனிலாவையும் விட்டு சேர்த்து ஒரு பட்டர் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி சூட்டுடனே விரும்பிய வடிவங்களில் வெட்டி வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: