தேங்காய் பர்பி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ

சீனி - 1/2 கிலோ

தேங்காய் - 2

நெய் - 100 கிராம்

செய்முறை:

நன்கு முற்றின தேங்காய்களாக தேர்ந்தெடுத்து, துருவி வைத்து கொள்ளவும்.

பிறகு துருவிய தேங்காயை வாணலியில் இட்டு, வதக்கி கொள்ளவும். ரவையை 10 நிமிடம் வதக்கவும்.

100 மில்லி தண்ணீரில் சீனியை கொட்டி பாகு காய்ச்சவும்.

காய்ச்ச பாகில் ரவையும், தேங்காயையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.

50 கிராம் நெய்யை அதில் ஊற்றிக் கிளறி, பிறகு நெய் தடவிய ஒரு தட்டில் ஊற்றவும்.

சற்று சூடாக இருக்கும் போதே அதை விரும்பிய வடிவங்களில் துண்டு போட்டுக் பரிமாறவும்.

குறிப்புகள்: