தேங்காய் பர்பி (1)
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 2 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 5
முந்திரி - 10
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
சர்க்கரையில் 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
பின் தேங்காயை போட்டு கிளறி சுருண்டு வரும் போது ஏலக்காயும், முந்திரியும் தூளாக்கி போட்டு 2 தேக்கரண்டி நெய்யை விட்டு கிளறி ஒரு தட்டில் நெய் தடவி கிண்டியதை கொட்டி பரப்பி சற்று ஆறியவுடன் சிறு சிறு பர்பியாக கட் பண்ணிக்கொள்ளவும்.