தேங்காய் பர்ஃபி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 4 கப்

சீனி - 2 கப்

வற்றிய பால் - 1/2 லிட்டர்

வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1/2 கப்

முந்திரி பருப்பு - 10

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் தேங்காய் துருவலை ஒரு வாணலியில் போட்டு நெய்விட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியை வறுத்த துருவல்கள் இல்லாமல் துடைத்துவிட்டு, சீனியை கொட்டி அரை கப் தண்ணீர் சேர்த்து சீனி நன்கு கரையும் வரை காய்ச்சவும்.

பிறகு, அதனுடன் வற்றிய பால் மற்றும் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, வறுத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

அது திக்கானவுடன் வாணலியில் ஒட்டாமல் திரண்டுவரும்போது நெய் தடவிய ஒரு ட்ரேயில் கொட்டி பரப்பி, முந்திரிப்பருப்புகளை பாதியாக உடைத்து அதன் மேல் தூவி லேசாக அழுத்திவிடவும்.

சற்று ஆறியவுடன் கத்தியால் கீறி வில்லைகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: