தேங்காய் பர்ஃபி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மெல்லியதாக துருவிய தேங்காய் துருவல் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் - 1s

நெய் - சிறிது

முந்திரி - தேவைக்கு (விரும்பினால்)

செய்முறை:

தேங்காய் துருவலின் வெண்மையான பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கொட்டி சிறுந்தீயில் வைக்கவும்.

மெதுவாக கிளறி விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கெட்டியான கலவையாகும்.

பின் நீர்த்து, சில நிமிடங்களில் ஓரங்களில் நுரைக்க துவங்கும். கைவிடாமல் மிதமான தீயில் கிளறி விடவும். சிறிது நேரத்தில் கலவை முழுவதும் நுரைப்பது போல் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.

இப்போது ஏலக்காய் சேர்க்கவும். தேங்காயின் வெண்மை மாறாமல் இருக்க வேண்டும். இப்போது முந்திரி சேர்க்க விரும்பினால் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். லேசாக சூடு இருக்கும் போதே துண்டுகளாக்க கத்தியால் கோடிடவும்.

ஆறிய பின் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

பதம் வந்த பின் அதிக நேரம் அடுப்பில் வைத்தால் பர்ஃபி சாஃப்ட்டாக இருக்காது. பதம் வரும் முன் எடுத்தால் தேங்காய் பர்ஃபிக்கு பதில் தேங்காய் அல்வா ஆகிவிடும். :) செய்ததை தட்டில் கொட்டும் முன் ஓரத்தில் உள்ள சர்க்கரை பாகை தொட்டு பார்த்தால் கம்பி பதம் வந்திருக்கும். அதை வைத்தே சரியான பதம் என்பதை கண்டு கொள்ளலாம். புதிதாக செய்பவர்கள் பதம் வரும் முன் எடுத்து விட்டோம் அல்வாவாக உள்ளது என தோன்றினால், மீண்டும் 1 மேசைக்கரண்டி நீர் விட்டு கலந்து அடுப்பில் வைத்து கிளறலாம்.