தேங்காய் அல்வா
0
தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல் - ஒரு மூடி
உலர்ந்த திராட்சை - 1/4 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
ரவா - 1/2 கப்
சீனி - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
நீர் - 1 கப்
செய்முறை:
தேங்காயையும் திராட்சையையும் கெட்டியாக அரைக்கவும்.
கோதுமை மாவையும் ரவாவையும் தனித்தனியே பொன்னிறமாக வறுக்கவும்.
இத்துடன் அனைத்தையும் கலந்து, அந்த விழுதை ஒரு அகன்ற நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.