தேங்காய்ப் பாயசம்
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
வெல்லம் - பெரிய எலுமிச்சம் பழ அளவு
ஏலக்காய் - 2
செய்முறை:
வெந்நீரை கொதிக்க வைத்து அதில் அரிசியை ஊற வைத்து எடுக்கவும்.
அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வெல்லத்தை சிறிதாக சீவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வேகும் வரை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய், நெய் முதலியவற்றை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.