திருவாதிரைக் களி
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் - 5
தேங்காய் - 1 மூடி
முந்திரி - 10
நெய் - 100 கிராம்
செய்முறை:
பச்சரிசியை நன்கு சிவக்க, பொரியும் வரை வறுக்கவும்.
வறுத்த அரிசியை சன்னமான ரவைப் போல் மிக்ஸியில் அரைக்கவும்.
பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, நெத்தாக வேக வைத்து எடுக்கவும்.
தேங்காயை துருவி சிவக்க வறுத்து வைக்கவும்.
வெல்லத்தைத் தூளாக்கி 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
மாவை அளந்து, மாவுக்கு இரு மடங்கு தண்ணீர் கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது மாவை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
வெந்த பாசிப்பருப்பு, தேங்காய், ஏலக்காய் பொடி, வெல்லப்பாகு சேர்த்து கிளறவும். மாவு நன்கு வெந்தவுடன் நெய் ஊற்றி கிளறவும்.
முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும்.