தஹி பாதுஷா
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கிலோ
மைதா - 150 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கெட்டியான தயிரை மெல்லிய துணியில் கட்டி தொங்க விடவும். தண்ணீர் வடிந்து, தயிர் கட்டி மட்டும் நிற்கும்.
அத்துடன் மைதாவை கலந்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.
சர்க்கரையை பாகு வைத்து, வெந்த வடைகளைப் போட்டு, ஊற விட்டு எடுத்து பரிமாறவும்.