டால் ஸ்வீட் புட்டு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 300 கிராம்

கடலைப் பருப்பு - 150 கிராம்

முற்றிய தேங்காய் - 1

அச்சு வெல்லம் - 8

நெய் - 3 தேக்கரண்டி

ஏலக்காய் - 7

முந்திரிப் பருப்பு - 7

உப்புத் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். 2 மணிநேரம் கழித்து கிரைண்டரில் சிறிது நீர் தெளித்து பூக்க அரைக்கவும்.

அதில் உப்பு சேர்த்து இட்லி தட்டில் துணியை நீரில் நனைத்து மாவை இட்லிகளாக வேக வைத்து, ஆற விட்டு கையால் உதிர்க்கவும்.

தேங்காயை பூ போல் துருவவும். வெல்லத்தை சீவி 200 மில்லி தண்ணீர் சேர்த்து, நன்கு கரைத்து மண்ணை வடிகட்டவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி துண்டுகளை பொரித்து, ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

ஏலக்காயை பொடி செய்யவும். முந்திரி வறுத்த நெய்யில் தேங்காய் துருவலை சிவக்க மணம் வரும் வரை வறுக்கவும்.

அதில் வடிகட்டிய வெல்ல நீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சவும்.

பாகு மணம் வந்ததும் முருகவிட வேண்டாம். உதிர்த்த மாவு கலவையை பாகில் சேர்த்து சற்று கிளறவும்.

உதிராக வரும் பக்குவத்தில் ஏலக்காயைச் சேர்த்துக் கிளறி வேறு பாத்திரத்தில் மாற்றவும். பின் ஆறியதும் மூடவும்.

குறிப்புகள்: