ஜவ்வரிசி அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 3/4 கப்

சீனி - 3/4 கப்

வெண்ணெய் (அல்லது) நெய் - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 2

வெனிலா எசன்ஸ் - 2 துளிகள்

ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஜவ்வரிசியைக் கழுவி 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

சீனியில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஏலக்காய் சேர்த்து பாகு காய்ச்சவும். பிறகு அரைத்த ஜவ்வரிசியில் ஒரு கப் தண்ணீர் விட்டு, தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

சீனி பாகுடன் வேக வைத்த ஜவ்வரிசி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

பிறகு ஃபுட் கலர், வெனிலா எசன்ஸ் சேர்த்து இடைவிடாது கிளறி இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: