ஜவ்வரிசிப் பாயசம் 2
0
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
காய்ந்த திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை அதில் போட்டு வேகவிடவும்.
ஜவ்வரிசி நன்றாக முழுவதும் வெந்து கண்ணாடி போல் ஆனவுடன் சர்க்கரையை போட்டு பாலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
அதனுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சைப் பழங்கள் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
மீதமிருக்கும் நெய்யை பாயசத்துடன் கலந்து கொள்ளவும்.