ஜவ்வரிசிப் பாயசம் 1

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 3

குங்குமப்பூ - 2 சிட்டிகை

கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை

திராட்சை - 6

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி ஜவ்வரிசியை போட்டு வறுத்துச் சிவந்தவுடன் தண்ணீர் கலந்து கட்டியாகாமல் கிளறவும்.

ஜவ்வரிசி நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

காய்த்து வைத்த பாலுடன் குங்குமப்பூ, கேசரிப்பவுடர், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கி ஜவ்வரிசியோடு சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை இவற்றைச் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: