சோமாஸ்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

டால்டா - 1/4 கப்

வேர்கடலை - 1/2 கப்

வெல்லம் - 1/2 அல்லது 3/4 கப்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

டால்டா, உப்பு சேர்த்து மாவை நன்று மிருதுவாக பிசையவும்.

வேர்கடலை வறுத்து தோல் நீக்கவும்.

வேர்கடலை, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

பிஸைந்த மாவை சின்ன சின்ன உருண்டையாக எடுத்து மெல்லிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.

இதன் நடுவில் வேர்கடலை வெல்ல பூரணத்தை வைத்து மடிக்கவும்.

ஓரத்தை விரலால் அழுத்து மூடி விடவும் (இல்லை என்றால் எண்ணெயில் போடும் போது விட்டுப்போகும்)

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: