சோமாசா
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
சீனி - 2 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கசகசா - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
வாணலியில் பொட்டுகடலையை லேசாக வறுக்கவும்.
கசகசாவை சிவக்க வறுக்கவும்.
தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுக்கவும்.
சீனி, பொட்டுகடலை, தேங்காய்துருவல், கசகசா ஒவ்வொன்றையும் தனித் தனியாக பொடித்து, ஏலப்பொடி சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
மைதா மாவில் 2 தேக்கரண்டி நெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
சிறிய உருண்டை மாவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து அதில் ஒரு தேக்கரண்டி பூரணம் வைக்கவும்.
ஒரு பாதியில் தண்ணீர் தொட்டு ஒட்டி மூடவும், சோமாசா கரண்டியால் ஓரத்தை வெட்டவும்.
படத்தில் உள்ளது போல் நான்கைந்து செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோமாசாவை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொரிக்கவும்.
குறிப்புகள்:
இதை காற்று புகாத ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.