சோன் பப்டி (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 மேசைக்கரண்டி

கெட்டித்தயிர் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 1 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1 கப்

முந்திரி பருப்பு - 8

நெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

முந்திரியை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து சிறு துண்டுகளாக்கவும்.

பிறகு சர்க்கரை மைதா, தண்ணீர். தயிர், பாதியளவு நெய் இவற்றை எல்லாம் ஒரு நான்ஸ்டிக் கடாயில் கொட்டி மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.

பிறகு மீதி உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு பக்கங்களில் ஒட்டாமல் வரும் போது முந்திரி துண்டுகளை போட்டு நன்றாய் கிளறி சிறிது தளர இருக்கும் போது நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டு போடவும்

குறிப்புகள்: