சேமியா பாயாசம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சேமியா - 100 கிராம்

சீனி - தேவையான அளவு

முந்திரி - 10

ஏலக்காய் - 3

தேங்காய் பால் - 1 கப் (முதல் தேங்காய் பால் மட்டும்)

நெய் - 3 தேக்கரண்டி

கிஸ்மிஸ் பழம் - 10

மைதா - 2 தேக்கரண்டி

உப்பு - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் பழத்தை போட்டு வறுக்கவும்.

முந்திரி சிவந்ததும் அதில் சேமியாவைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த சேமியாவில் 2 கப் தண்ணீர் ஊற்றி சீனி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு மைதாவில் 5 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் ஊற்றி கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்ததும் அதில் தேங்காய் பால் ஊற்றி கிளறிவிட்டு மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: