சேமியா பாயசம் (2)
தேவையான பொருட்கள்:
சேமியா - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பால் - ஒரு லிட்டர்
குங்குமப்பூ - சிறிது
கேசரி பவுடர் - சிறிது
ஏலக்காய் - 4
நெய் - 10 கிராம்
செய்முறை:
வாணலியைச் சுத்தம் செய்து அடுப்பில் வையுங்கள். சேமியாவை சிறு துண்டுகளாக ஒடித்துக் கொள்ளுங்கள்.
வாணலி காய்ந்ததும் சிறிது நெய் விட்டு சேமியாவைப் போட்டுச் சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டுங்கள். இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள்.
நன்றாக கொதித்து சேமியா வெந்ததும் பால்,சர்க்கரை இரண்டையும் அதில் விட்டுக் கலக்குங்கள்.
எல்லாமாகச் சேர்ந்து கொதித்ததும் இறக்கி குங்குமப்பூ, கேசரிப்பவுடர் இரண்டையும் போட்டு நன்றாக் கலக்கி விடுங்கள்.
வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வையுங்கள். காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து பாயசத்தில் போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
ஏலக்காயை நசுக்கிப் போட்டு உபயோகியுங்கள்.