சேமியா பாயசம் (1)
தேவையான பொருட்கள்:
சேமியா - 100 கிராம்
சீனி - 3/4 கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 3
பால் - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
நல்ல திக்கான பசும்பாலாக வாங்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் பாலும் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.
அது கொதிக்கும் நேரத்தில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரியை போட்டு வறுத்து, நெய்யுடன் எடுத்து தனியே வைக்கவும்.
பிறகு அதே வாணலியில் சேமியாவை உடைத்துப் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும். நெய் சேர்க்கத் தேவையில்லை.
பால் மூன்று நிமிடம் கொதித்ததும், அதில் வறுத்த சேமியாவைப் போட்டுக் கிளறி சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
அதன்பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரியை நெய்யுடன் கொட்டவும். விருப்பம் உள்ளவர்கள் முந்திரியுடன் உலர்ந்த திராட்சையையும் (கிஸ்மிஸ்) நெய்யில் பொரித்துப் போடலாம்.
பின்னர் சீனியை கொட்டி, அது பாலுடன் நன்கு கரையும் வரை கிளறவும். சீனி கரைந்த பின்னர் 2 நிமிடங்கள் வேகவிட்டு பிறகு இறக்கவும்.
இறக்கியவுடன் அதில் ஏலக்காயைப் பொடித்துப் போட்டு பரிமாறவும்.