சேமியா கேசரி (1)
தேவையான பொருட்கள்:
சேமியா - 250 கிராம்
தண்ணீர் - 600 மில்லி லிட்டர்
சீனி - 4 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் - 5
கேசரி பொடி - ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு - சிறிது
கிஸ்மிஸ் (திராட்சை) - சிறிது
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
சேமியாவை சிறு துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் சேமியாயைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியைப் சுத்தம் செய்து பாதி அளவு நெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.
அது காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, திராட்சையைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விடவும்.
கொதித்து தண்ணீர் சுண்டியதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறி பிறகு கேசரிப் பவுடரையும் போடவும்.
நெய்யைப் சிறிது சிறிதாக விட்டுக் கிளறி, குங்குமப் பூவையும் ஏலக்காயைத் தட்டியும் போடுங்கள்.
கேசரி கையில் ஓட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.