சுலப கேரட் அல்வா
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கேரட் துருவியது - 2 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
முந்திரி பருப்பு - 20
பால்பௌடர் - 1 கப்
நெய் - 50 கிராம்
ஏலக்காய் பௌடர் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
பால்,கேரட் துருவல் இவற்றை ஒன்றாக கலந்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும்.
விசில் வந்ததும் இறக்கி வாணலியில் மாற்றி பால் சுண்டும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
பால் வற்றியதும் சக்கரை சேர்த்துக் கிளறவும்.
நீர் வற்றி சுருள வரும்போது பால் பௌடரை தூவி சற்று கிளறி பின் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து இறக்கி ஏலப்பொடி தூவவும்.