சுரைக்காய் பாயாசம்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - பாதி

ஜவ்வரிசி (சிறியது) - 1/2 கப்

பால் - 1/2 லிட்டர்

முந்திரி - 5

திரட்சை - 4

ஏலக்காய் - 2

சீனி - 1 கப்

புட்கலர் (பச்சை) - சிறிது

வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை:

சுரைக்காயை தோல் நீக்கி விட்டு கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். துருவிய சுரைக்காயை இட்லி தட்டில் வேக வைத்து, வெந்ததும் எடுத்து ஆற வைத்து இரண்டு கைகளால் அழுத்தி தண்ணீரை பிழிந்து விட்டு தனியே வைக்கவும்.

ஓரு பாத்திரத்தில் தண்ணீர் அரை கப் ஊற்றி கொதிக்க வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு வேக வைக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும் அதில் சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம் கழித்து சர்க்கரை சேர்க்கவும்.

சர்க்கரை நான்றாக கரைந்த பின் ஏலக்காய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி வைக்கவும்.

இறக்கி வைத்ததும் காய்ச்சிய பாலை வடிகட்டி அதில் சேர்க்கவும்.

கடைசியாக புட் கலரையும், வெனிலா எசன்ஸையும் சேர்த்து பரிமாறலாம். விருப்பப்பட்டோர் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

குறிப்புகள்:

புட் கலர், வெனிலா எசன்ஸை கொஞ்சமாக சேர்க்கவும்.

பாயாசத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

சக்கரைக்கு பதில் இனிப்பு பால்கோவா சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.