சுரைக்காய் கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோல் நீக்கி துருவிய சுரைக்காய் - 1 கப்

ரவை - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1/2 கப்

ஏலக்காய்ப் பொடி - சிறிது

நெய் - 1/4 கப்

நட்ஸ் - தேவையான அளவு

பச்சை ஃபுட் கலர் - சிறிது

செய்முறை:

சுரைக்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் வைத்து 4 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும்.

அதனுடன் வேக வைத்த சுரைக்காயைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கிளறிவிட்டு அரை கப் கொதித்த தண்ணீர் ஊற்றி, ஃபுட் கலர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பிறகு எலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கி நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி பரிமாறவும்..

குறிப்புகள்: