சுரைக்காய் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய சுரைக்காய் - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

பால்கோவா - 1 கப்

பால் - 1 கப்

ஏலக்காய் - 6 பொடித்துக் கொள்ளவும்.

கலர் பொடி - 1 சிட்டிகை

பாதாம் - 5

முந்திரிப்பருப்பு - 10

நெய் - 5 தேக்கரண்டி

செய்முறை:

பால், துருவிய சுரைக்காய் காயை கடாயில் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.

சுரைக்காய் காயே தண்ணீர் விடும் என்பதால் மேலும் தண்ணீர் விட வேண்டாம். பச்சை வாசனை இல்லாமல் நன்கு வெந்த பின், சர்க்கரை துருவிய பால்கோவா போட்டு கிளறவும்.

கலர் பொடி சேர்க்கவும்.

சர்க்கரை சுரைக்காய் காயுடன் நன்கு சேர்ந்த பின், நெய் ஊற்றி கிளறவும்.

பிறகு பாதாம் ஏலக்காய் சேர்த்து, முந்திரியையும் நெய்யில் வறுத்து சேர்த்து கலக்கவும்.

குறிப்புகள்: