சுருள் பூரி
தேவையான பொருட்கள்:
மைதா - 1/4 கிலோ
டால்டா - 1/4 கப்
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
ஒயிட் சாஸ் செய்வதற்கு:
டால்டா - 1/4கப்
மைதா - 1/2கப்
எண்ணெய் - 300 மிலி
சர்க்கரை - 1/4 கிலோ
எலுமிச்சை - பாதி மூடி
செய்முறை:
மைதாவுடன் டால்டா, சமையல் சோடா சேர்த்துப் பிசறிக்கொள்ளவும்.
நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒயிட் சாஸ் செய்ய டால்டாவை உருக்கி சூடாக இருக்கும் பொழுதே மைதாவைக் கலந்து பேஸ்ட் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை 1 1/2டம்ளர் நீர், எலுமிச்சைசாறும் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
மைதாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி வட்ட வடிவில் சப்பாத்தியாக தேய்க்கவும்.
ஒரு டீஸ்பூன் அளவு ஒயிட் சாஸை எடுத்து சப்பாத்தியின் மீது பரவலாக தடவவும்.
அதனை பரோட்டாவுக்கு செய்வது போல் ஃபிரில் செய்து வட்டமாக சுற்றிவைக்கவும்.
இப்படியே எல்லா உருண்டைகளை தயார் செய்யவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடேறியதும் சுற்றி வைத்த மாவை கனமான சப்பாத்திகளாக இட்டு எண்ணெயில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
பொன்னிறத்தில் மொறுகலாக வரும் வரை பொரிக்கவும்.
சுட்ட பூரிகளை பாகில் லேசாக தோய்த்து பாகை வடிய விட்டு டப்பாவில் அடுக்கவும்.
குறிப்புகள்:
ஒரே தடவையில் 4 பூரிகளை சுடலாம்.