சுக்கு களி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)

சுக்கு - ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)

ஏலக்காய் - 1 என்னம்

எண்ணைய் - 100 கிராம்

கருப்பட்டி வெல்லம் - 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் நைசாக ஆட்டிக் கொள்ளாவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.

வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அனைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும்.

பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு குடுப்பார்கள்.