சிவப்பு அவல் பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல் - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

பால் - 3 கப்

ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு

நெய்யில் வறுத்த முந்திரி - 10

பொடியாக நறுக்கிய பாதாம் - 5

செய்முறை:

சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். அதனுடன் அவல் சேர்க்கவும்.

பிறகு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்க்கவும்.

குறிப்புகள்: