சிங்கப்பூர் ஸ்வீட்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
ரம்பை இலை - 1
தேங்காய் பூ - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு கரைய விடவும்
கரைந்ததும் தேங்காய்ப்பால் அரிசிமாவு போட்டு களி போன்று கிளறவும்.
பின் சிறுசிறு உருன்டைகளாக உருட்டி வைக்கவும்
மறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ரம்பை இலை போட்டுக் கொதிக்கவிடவும்.
கொதித்தும் சிறுசிறு உருண்டைகளை அதில் போட்டு வெந்ததும் தேங்காய்ப் பூவில் பிரட்டி எடுத்து பரிமாறவும்.